Spatial Reasoning & Kinaesthetic Intelligence- Level 1(12-14 years) - Worksheet

Spatial Reasoning & Kinaesthetic Intelligence- Level 1 (12-14 years)

இடஞ்சார்ந்த பகுத்தறிவு மற்றும் செயல்வழி நுண்ணறிவு- நிலை 1 (12-14 வயதினர்)

Spatial Reasoning இடஞ்சார்ந்த பகுத்தறிவு

Spatial reasoning is the capacity to think, imagine, visualize and differentiate objects in two or three dimensions. It gives us the ability to understand, manipulate and modify complex data and translate concepts into concrete ideas. இடஞ்சார்ந்த பகுத்தறிவு என்பது இரண்டு அல்லது மூன்று பரிமாணங்களில் பொருட்களை குறித்து சிந்திக்கவும், கற்பனை செய்யவும், காட்சிப்படுத்தவும் வேறுபடுத்தவும் உதவும் திறன். சிக்கலான தகவலைப் புரிந்துகொள்வதற்கும், கையாளுவதற்கும், மாற்றியமைப்பதற்கும், கருத்துக்களை உறுதியான யோசனைகளாக மொழிபெயர்ப்பதற்கும் இது நமக்குத் திறனைக் கொடுக்கிறது.

Spatial abilities are used in navigation, understanding or fixing equipment, understanding or estimating distance and measurement, and performing on a job that involves the use of objects. வழியை விவரித்தல், ஒரு இயந்திரத்தைப் புரிந்துகொள்ளுதல் அல்லது சரிசெய்தல், தூரத்தையும் அளவையும் புரிந்துகொள்ளுதல் அல்லது மதிப்பிடுதல் மற்றும் பொருட்களின் பயன்பாட்டை உள்ளடக்கிய ஒரு வேலையைச் செய்தல் போன்றவற்றிற்கு இடஞ்சார்ந்த திறன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Kinaesthetic Intelligence செயல்வழி நுண்ணறிவு

Kinaesthetic Intelligence is the capacity to use one's body with great precision, helping to facilitate the implementation of our goals and personal objectives. Those with kinaesthetic intelligence are able to use the body to move from intention to action. செயல்வழி நுண்ணறிவு என்பது ஒருவரின் உடலை மிகத் துல்லியமாகப் பயன்படுத்துவதற்கான திறன், இது குறிக்கோள்களையும் தனிப்பட்ட நோக்கங்களையும் செயல்படுத்த உதவுகிறது. செயல்வழி நுண்ணறிவு உள்ளவர்கள் சிந்தனையிலிருந்து செயலுக்கு நகர முடியும்.

People with Kinaesthetic intelligence do well in sports, dance or anything that involves action. செயல்வழி நுண்ணறிவு உள்ளவர்கள் விளையாட்டு, நடனம் அல்லது செயல்கள் ஈடுபட்டிருக்கும் எதையும் சிறப்பாகச் செய்வார்கள்.

 

TASK 1: Shape Matching – Two Dimensional பணி 1: வடிவம் பொருத்தம் - இரண்டு பரிமாணம்

In shape matching-two dimensional, two groups of simple, flat objects should be observed and pairs that are exactly the same size and shape should be found. வடிவம் பொருத்தம் - இரண்டு பரிமாணத்தில், இரண்டு குழுக்களில் உள்ள எளிமையான, தட்டையான வடிவங்கள் கவனிக்கப்பட வேண்டும், ஒரு குழுவில் உள்ள வடிவத்தை போன்று அதே அளவு மற்றும் உருவத்தை கொண்ட ஜோடியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

Example 1: எடுத்துக்காட்டு 1:

Which shape in Group 2 corresponds to a shape in Group 1? குழு 2 இல் உள்ள எந்த வடிவம் குழு 1 இல் உள்ள வடிவத்துடன் ஒத்துள்ளது?

Answers விடைகள்: 1. X; 2. P; 3. M; 4. V; 5. G; 6. A; 7. D; 8. T; 9. C; 10. B; 11. W; 12. E; 13. U; 14. Y; 15. F; 16. S; 17. H; 18. K; 19. J; 20. L; 21. O; 22. N; 23. Q; 24. R; 25. I

Which shape in Group 2 corresponds to a shape in Group 1? குழு இல் உள்ள எந்த வடிவம் குழு இல் உள்ள வடிவத்துடன் ஒத்துள்ளது?

Extra Task 1: Create Shape Matching – Two-Dimensional question for your friends that may be challenging and share. கூடுதல் பணி 1: சவாலாக உள்ள வடிவம் பொருத்தம் - இரண்டு பரிமாணம் கேள்வியை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.


Task 2: T puzzle பணி 2: டி புதிர்

The T puzzle is a tiling puzzle consisting of four polygonal shapes which can be put together to form a capital T. The four pieces are usually one isosceles right triangle, two right trapezoids and an irregular shaped pentagon. Despite its apparent simplicity, it is a surprisingly hard puzzle of which the crux is the positioning of the irregular shaped piece.

டி புதிர் என்பது நான்கு வடிவங்களைக் கொண்ட ஒரு புதிர் ஆகும், அவை ஆங்கில எழுத்து ‘T’ ஐ உருவாக்க ஒன்றாக இணைக்கப்படலாம். நான்கு துண்டுகள் என்னவெனில் ஒரு ஐசோசிலஸ் வலது முக்கோணம், இரண்டு வலது ட்ரெபிசாய்டுகள் மற்றும் ஓரு ஒழுங்கற்ற பென்டகன் ஆகும். அது எளிமையானதாக தோன்றினாலும், இது ஒரு வியக்கத்தக்க கடினமான புதிர், இதில் ஒழுங்கற்ற வடிவ துண்டுகளை சரியாக இடம் அமர்த்துவது கடினம்.

Example 2: எடுத்துக்காட்டு 2:

The letter 7 can be formed by the T puzzle pieces as follows. 7 என்ற எழுத்தை டி புதிர் துண்டுகள் மூலம் பின்வருமாறு உருவாக்கலாம். 

 

 

 

 


Extra Task 2: Create some new shapes using T puzzle for your friends that may be challenging and share. கூடுதல் பணி 2: டி புதிரை பயன்படுத்தி சவாலாக உள்ள புதிய உருவங்களை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

TASK 3: Visual Comparison – Two Dimensional பணி 3: காட்சி ஒப்பீடு - இரண்டு பரிமாணம்

In Visual Comparison – Two Dimensional, several objects will be presented, in which some objects may be identical, or there may be some commonalities among some objects. காட்சி ஒப்பீடு - இரண்டு பரிமாணத்தில், பல வடிவங்கள் வழங்கப்படும், இதில் சில பொருள்கள் ஒரே மாதிரியாக இருக்கலாம் அல்லது சில பொருள்களுக்கு இடையே சில பொதுவான தன்மைகள் இருக்கலாம்.

Example 3: எடுத்துக்காட்டு 3:

Which two pictures are identical? எந்த இரண்டு படங்கள் ஒத்தவை?

Answer: C & E பதில்: C & E 

Exercise 3: பயிற்சி 3: 

Choose the figure which is different from the rest? மற்றவற்றிலிருந்து வேறுபட்ட உருவத்தைத் தேர்வுசெய்க.?

1.    

Extra Task 3: Create Visual Comparison – Two Dimensional questions for your friends that may be challenging and share. கூடுதல் பணி 3: சவாலாக உள்ள காட்சி ஒப்பீடு - இரண்டு பரிமாணம் கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

TASK 4: Group Rotation – Two Dimensional பணி 4: குழு சுழற்சி - இரண்டு பரிமாணம்

Group Rotation – Two Dimensional is slightly more complex than the rotations in the two-dimensional shape matching. குழு சுழற்சி - இரு பரிமாணம் என்பது  இரு பரிமாண வடிவ பொருத்தத்தை விட சற்று சிக்கலானது.

Example 4: எடுத்துக்காட்டு 4:

Which of the answer figures is a rotation of the question figure? விடையில் உள்ள வடிவங்களில் எது கேள்வி உருவத்தின் சுழற்சி?

Answer: C பதில்: C

In the example above, the white square is clockwise from the arrow. This means that A, B and D cannot be rotations of the question figure. This leaves only C as a possibility, which can quickly be checked element by element.

மேலே உள்ள எடுத்துக்காட்டில், வெள்ளை சதுரம் அம்புக்குறியில் இருந்து கடிகார திசையில் உள்ளது. இதன் பொருள் A, B மற்றும் D ஆகியவை கேள்வி உருவத்தின் சுழற்சிகளாக இருக்க முடியாது. இது C ஐ மட்டுமே சாத்தியமாக விட்டுவிடுகிறது, இதை உறுப்பு உறுப்பாக விரைவாக சரிபார்க்கலாம்.

Extra Task 4: Create Group Rotation – Two Dimensional questions for your friends that may be challenging and share. கூடுதல் பணி 4: சவாலாக உள்ள குழு சுழற்சி - இரண்டு பரிமாணம் கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

TASK 5: Combining Two–Dimensional Shapes பணி 5: இரு பரிமாண வடிவங்களை இணைத்தல்

In Combining Two–Dimensional Shapes, One of the shapes has been cut up into pieces, and the complete shape should be found by connecting pieces. இரு பரிமாண வடிவங்களை இணைப்பதில், பெரிய வடிவம் ஒன்று துண்டுகளாக வெட்டப்பட்டு இருக்கும், துண்டுகளை இணைப்பதன் மூலம் முழுமையான வடிவத்தைக் கண்டறிய வேண்டும்.

Example 5 : எடுத்துக்காட்டு 5:

Which of the complete shapes can be made from the components shown? கொடுக்கப்பட்டுள்ள கூறுகளிலிருந்து முழுமையான வடிவங்களில் எது உருவாக்கப்படலாம்?

Answer: B பதில்: B

In the example above, this is not very obvious but sometimes there are one or two shapes that can be immediately discounted based on size alone. One thing to remember is that if the complete shapes don’t have any bits sticking out (they usually don’t) then the components must fit together so that sides of the same length are together. This reduces the number of combinations considerably. மேலே உள்ள எடுத்துக்காட்டில், இது மிகவும் தெளிவாக இல்லை, ஆனால் ஒன்று அல்லது இரண்டு வடிவங்களை அவற்றின் அளவு அடிப்படையில் உடனடியாக நிராகரிக்கலாம். நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், முழுமையான வடிவங்களுடன் தனி வடிவங்கள் பொருந்தும் என்றால் (அவை வழக்கமாக பொருந்தாமல் இருப்பதில்லை), பின்னர் கூறுகள் ஒன்றாக பொருந்த வேண்டும், ஒரே நீள பக்கத்தை கொண்ட வடிவங்கள் ஒன்றாக சேரும். இது சேர்க்கைகளுக்கான விடையை கணிசமாகக் குறைக்கிறது.

Exercise 5: பயிற்சி 5:

Find out which of the figures (1), (2), (3) and (4) can be formed from the pieces given in figure (X). உருவம் (X) இல் கொடுக்கப்பட்டுள்ள துண்டுகளிலிருந்து (1), (2), (3) மற்றும் (4) இல் எந்த உருவம் உருவாக்கப்படலாம் என்பதைக் கண்டறியவும் 

Extra Task 5: Create Combining Two–Dimensional Shapes questions for your friends that may be challenging and share. கூடுதல் பணி 5: சவாலாக உள்ள இரு பரிமாண வடிவங்களை இணைத்தல் கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

 Task 6: 8-Puzzle: பணி 6: 8-புதிர்:

The 8-puzzle is played on a 3-by-3 grid with 8 square blocks labelled 1 through 8 and a blank square as mentioned in the figure. The goal is to rearrange the blocks by sliding one square at a time to the blank space, so that they are in order. 8-புதிர் என்பது படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி3*3 கட்டத்தில் 1 முதல் 8 என பெயரிடப்பட்ட 8 சதுர பகுதிகள் மற்றும் ஒரு வெற்று சதுர பகுதியைக் கொண்டது. ஒரு நேரத்தில் ஒரு சதுரத்தை வெற்று இடத்திற்கு சறுக்கி நகர்த்துவதன் மூலம் பகுதிகளை சீராக வரிசைப்படுத்துவதே குறிக்கோள், இதனால் அவை 1- 8 வரை ஒழுங்காக இருக்கும்.

`

Cut the 9 pieces of the 3-by-3 grid that is given in the annexure at the last. First put the numbers in the places as shown in the picture above, take the blank piece away and then rearrange in the order by sliding one square at a time up or down or sides to the blank space. கடைசியாக இணைப்பில் கொடுக்கப்பட்ட 3*3 கட்டத்தின் 9 துண்டுகளை வெட்டுங்கள். மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி முதலில் எண்களை இடங்களில் வைத்து,வெற்று துண்டை அகற்றி, பின்னர் மேலே அல்லது கீழே அல்லது பக்கத்தில் உள்ள ஒரு சதுரத்தை வெற்று இடத்திற்கு தொடர்ந்து சறுக்கி வரிசையில் மறுசீரமைக்கவும். 

 

Extra Task 6: Create a difficult pattern of 8-puzzle for your friends that may be challenging and share. கூடுதல் பணி 6: சவாலாக உள்ள 8-புதிரின் கடினமான மாதிரியை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

TASK 7. Cube Views in Three Dimensions பணி 7. மூன்று பரிமாணங்களில் கனச்சதுர காட்சிகள்

Cube Views in Three Dimensions shows several (usually three) views of a three-dimensional cube with unique symbols or markings on each face and the aim is to find the symbol in the missing side. மூன்று பரிமாணங்களில் கனச்சதுர காட்சிகள் என்பது ஒவ்வொரு முகத்திலும் தனித்துவமான சின்னங்கள் அல்லது அடையாளங்களைக் கொண்ட முப்பரிமாண கனசதுரத்தின் பல (பொதுவாக மூன்று) காட்சிகளைக் காட்டுகிறது மற்றும் அதை பயன்படுத்தி குறிப்பிடப்படாமல் இருக்கும் பக்கத்தில் சின்னத்த்தை அல்லது அடையாளத்தை கண்டுபிடிப்பதே இதன் நோக்கம்.

Example 7 : எடுத்துக்காட்டு 7:

Three views of the same cube are shown above. Which symbol is opposite the X? ஒரே கனசதுரத்தின் மூன்று காட்சிகள் மேலே காட்டப்பட்டுள்ளன. X க்கு எதிர் எந்த சின்னம் இருக்கும்?

Answer: D பதில்: D

In the question above, you can simply use a process of elimination. If you can see a symbol next to the ‘X’ on the cube, then it cannot be opposite. The second and third cubes eliminate A, B and C. This leaves only D and ‘other’ as possibilities. D has edges shared with A and B, which would be consistent with the third cube illustrated. Therefore, D is correct. மேலே உள்ள கேள்வியில், நீங்கள் நீக்குதல் செயல்முறையைப் பயன்படுத்தலாம். கனசதுரத்தில் ‘X’ க்கு அடுத்ததாக ஒரு குறியீட்டைக் காண முடிந்தால், அது அதற்கு எதிராக இருக்க முடியாது. இரண்டாவது மற்றும் மூன்றாவது கனசதுரத்தினால் A, B, மற்றும் C ஆகியவற்றை நீக்கலாம். எனவே D மற்றும் ‘மற்றவை’ மட்டுமே சாத்தியக்கூறுகளாக இருக்கின்றன. D, A மற்றும் B உடன் பகிரப்பட்ட விளிம்புகளைக் கொண்டுள்ளது, இது விளக்கப்பட்ட மூன்றாவது கனசதுரத்துடன் ஒத்திருக்கும். எனவே, D சரியானது.

Extra Task 7: Create Cube Views in Three Dimensions questions for your friends that may be challenging and share. கூடுதல் பணி 7: சவாலாக உள்ள மூன்று பரிமாணங்களில் கனச்சதுர காட்சிகள் கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

TASK 8. Cubes in Two and Three Dimensions பணி 8. இரண்டு மற்றும் மூன்று பரிமாணங்களில் கனசதுரங்கள்

Cubes in Two and Three Dimensions show a flat (two-dimensional) pattern that can be folded to make a cube. The answer options will usually be four three-dimensional cubes. The pattern and the cubes have symbols or markings on each face.  இரண்டு மற்றும் மூன்று பரிமாணங்களில் உள்ள க்யூப்ஸ் ஒரு கனசதுரத்தின் தட்டை (இரு பரிமாண) வடிவத்தைக் காட்டுகின்றன, அவற்றை மடிப்பதால் ஒரு கனசதுரத்தை உருவாக்கலாம். பதில் விருப்பங்கள் பொதுவாக நான்கு முப்பரிமாண கனசதுரமாக இருக்கும். கனசதுரங்களின் ஒவ்வொரு முகத்திலும் அடையாளங்கள் அல்லது வடிவங்கள் இருக்கும்.

Example 8 எடுத்துக்காட்டு 8:

Which of the cubes shown could be made from the pattern? காட்டப்பட்ட மாதிரியிலிருந்து எந்த கனசதுரத்தை உருவாக்கலாம்?

Answer: D பதில்: D

Look at the front of the cube, find that face on the pattern and use the pattern to identify the other face that touches the ‘front’ (in this example Left Hand Side) and eliminate any options that do not match. Use the pattern to identify the ‘top’ and eliminate any options that do not match. கனசதுரத்தின் முன்பக்கத்தைப் பார்த்து, வடிவில் அந்த முகத்தைக் கண்டுபிடியுங்கள், 'முன்பக்கத்தை' (இந்த எடுத்துக்காட்டில் இடது பக்கம்) தொடும் மற்ற பக்கத்தை அடையாளம் காணுங்கள், வடிவத்துடன் ஒப்பிட்டு பொருந்தாத விருப்ப தேர்வுகளை அகற்றுங்கள். மேலுள்ள பக்கம் என்ன என்பதை அடையாளம் காணுங்கள், வடிவத்துடன் ஒப்பிட்டு பொருந்தாத விருப்ப தேர்வுகளை அகற்றுங்கள்.

Exercise 8: பயிற்சி 8

1. How many dots lie opposite to the face having three dots, when the given figure is folded to form a cube? கொடுக்கப்பட்ட உருவம் ஒரு கனசதுரத்தை உருவாக்க மடிந்திருக்கும் போது, மூன்று புள்ளிகள் கொண்ட முகத்திற்கு எதிரே எத்தனை புள்ளிகள் உள்ளன?

a) 2                  b) 4                  c) 5                   d) 6

2. Choose the box that is similar to the box formed from the given sheet of paper (X). கொடுக்கப்பட்ட X ல் இருந்து உருவான பெட்டியைப் போன்ற ஒத்த பெட்டியைத் தேர்வுசெய்க.

a) 1 and 3 only              b) 1 and 4 only              c) 2 and 4 only              d) 3 and 4 only

Extra Task 8: Create Cubes in Two- and Three-Dimensions questions for your friends that may be challenging and share. கூடுதல் பணி 8: சவாலாக இரண்டு மற்றும் மூன்று பரிமாணங்களில் கனசதுரங்கள் கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

TASK 9. Other Solids in Two and Three Dimensions பணி 9. இரண்டு மற்றும் மூன்று பரிமாணங்களில் பிற திடப்பொருள்கள்

Other Solids in Two and Three Dimensions are similar to the cube patterns above but rather than cubes, they use other solid shapes which may be irregular. இரண்டு மற்றும் மூன்று பரிமாணங்களில் உள்ள மற்ற திடப்பொருள்கள் மேலே உள்ள கனசதுரங்களின் வடிவங்களைப் போலவே இருக்கின்றன, ஆனால் கனசதுரங்களை தாண்டி, ஒழுங்கற்றதாக இருக்கும் பிற திட வடிவங்களைப் அவை பயன்படுத்துகின்றன.

Example 9 எடுத்துக்காட்டு 9:

Which of the solid shapes shown could be made from the pattern? காட்டப்பட்ட திட வடிவங்களில் எது கொடுக்கப்பட்டுள்ள வடிவத்திலிருந்து உருவாக்கப்படலாம்?

Answer: D பதில்: D

Shape A can be eliminated because it shows an unshaded face below a triangular face, both of these faces (below the triangular face) are shaded on the pattern. Shape C can be eliminated for the same reason. Shape B can be eliminated as it has a shaded roof above the shaded side, which does not appear on the pattern. வடிவம் A ஐ அகற்றலாம், ஏனெனில் இது ஒரு முக்கோண முகத்திற்கு கீழே ஒரு நிழலிடப்படாத முகத்தைக் காட்டுகிறது, முக்கோண முகத்திற்கு கீழே உள்ள இரண்டு முகங்களின் வடிவத்திலும் நிழலிடப்பட்டுள்ளன. வடிவம் C அதே காரணத்திற்காக அகற்றப்படலாம். நிழல் பக்கத்திற்கு மேலே நிழலிட்ட கூரை இருப்பதால் வடிவம் B ஐ அகற்றலாம், இது கேள்வி வடிவத்தில் இடம் பெறவில்லை.

Exercise 9: பயிற்சி 9:

Extra Task 9: Create Other Solids in Two- and Three-Dimensions questions for your friends that may be challenging and share. கூடுதல் பணி 9: சவாலாக உள்ள  இரண்டு மற்றும் மூன்று பரிமாணங்களில் பிற திடப்பொருள்கள் கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

Task 10: Pentomino Puzzle: பணி 10: பென்டோமினோ புதிர்:

A standard pentomino puzzle is to tile a rectangular box with the pentominoes, that is without overlap and without gaps. Each of the 12 pentominoes has an area of 5-unit squares, so the box must have an area of 60 units. Possible sizes are 6×10, 5×12, 4×15 and 3×20. ஒரு நிலையான பென்டோமினோ புதிர் என்பது பென்டோமினோக்களுடன் செவ்வக பெட்டியாக இருப்பது, அதாவது ஒன்றுடன் ஒன்றாக இடைவெளிகள் இல்லாமல் இருப்பது. 12 பென்டோமினோக்களில் ஒவ்வொன்றிலும் 5 யூனிட் சதுரங்கள் உள்ளன, எனவே பெட்டியில் 60 அலகுகள் இருக்க வேண்டும். சாத்தியமான அளவுகள் 6 × 10, 5 × 12, 4 × 15 மற்றும் 3 × 20 ஆகும்.

 

Extra Task 10: Create some new shapes using Pentomino Puzzle for your friends that may be challenging and share. கூடுதல் பணி 10: பென்டோமினோ புதிரை பயன்படுத்தி சவாலாக உள்ள புதிய உருவங்களை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

TASK 11. Two-Dimensional Maps பணி 11. இரு பரிமாண வரைபடங்கள்

Two-Dimensional Maps will assess your ability to follow basic instructions and visualize a route, with a two-dimensional plan or map and a series of directions that relate to the same map. இரு பரிமாண வரைபடங்கள் அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கும், ஒரு வழியைக் காண்பதற்கும் உங்கள் திறனை மதிப்பிடுவதாகும்.  இரு பரிமாண திட்டம் அல்லது வரைபடம் ஒரே வரைபடத்துடன் தொடர்புடைய தொடர்ச்சியான திசைகளை கொண்டுள்ளது.

Example 11 எடுத்துக்காட்டு 11:

1. Officer Wilkinson is in Depp St and can see the Town Hall to her right. What direction is she facing? அதிகாரி வில்கின்சன் டெப் ஸ்ட்ரீட்டில் இருக்கிறார், டவுன் ஹாலை அவரது வலதுபுறத்தில் காணலாம். அவர் எந்த திசையை எதிர்கொள்கிறாள்?

A

B

C

D

North வடக்கு

South தெற்கு

East கிழக்கு

West மேற்கு

2. She turns and walks to the junction with Main St. She turns left and proceeds two blocks before turning right, then taking the next right, and walking half a block. Which location is nearest to her current position? அவர் திரும்பி மெயின் ஸ்ட்ரீட் உடன் இணைந்த சந்திக்கு நடந்து செல்கிறார். அவர் இடதுபுறம் திரும்பி வலதுபுறம் திரும்புவதற்கு முன் இரண்டு தொகுதிகளைத் தாண்டி தொடர்கிறாள், பின்னர் அடுத்த வலப்பக்கத்தை எடுத்துக்கொண்டு, அரைத் தொகுதி நடந்து செல்கிறார். அவருடைய தற்போதைய நிலைக்கு எந்த இடம் அருகில் உள்ளது?

A

B

C

D

M

N

R

P

Answers: 1. B & 2. A பதில்கள்: 1. B & 2. A

Exercise 11: பயிற்சி 11: 

Extra Task 11: Create Two-Dimensional Maps questions for your friends that may be challenging and share. கூடுதல் பணி 11: சவாலாக உள்ள இரு பரிமாண வரைபடங்கள் கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

TASK 12. Block Counting in Three Dimensions பணி 12. மூன்று பரிமாணங்களில் தொகுதி எண்ணுதல்

Block Counting in Three Dimensions will have a three-dimensional drawing of a shape formed from a group of blocks, some of which may be hidden. You will need to visualize the blocks you cannot see. மூன்று பரிமாணங்களில் தொகுதி எண்ணுதல் என்பது நிறைய தொகுதிகளில் இருந்து உருவான வடிவத்தின் முப்பரிமாண வரைபடத்தைக் கொண்டிருக்கும், அவற்றில் சில தொகுதிகள் மறைந்திருக்கலாம். நீங்கள் பார்க்க முடியாத தொகுதிகளை நீங்கள் காட்சிப்படுத்த வேண்டும்.

Example 12 எடுத்துக்காட்டு 12:

How many blocks make up the shape below? கீழே உள்ள வடிவத்தை எத்தனை தொகுதிகள் உருவாக்குகின்றன?

Answer: E பதில்: E

Try to break up the blocks in your mind. For example, in the exercise above, there is a block of three 5-cube pillars (which together makes 15 blocks), a group of three 3-cube pillars (which together makes 9 blocks), and two single blocks. Adding together 15 + 9 + 2 gives 26. தொகுதிகளை உங்கள் மனதில் பிரித்துப் பார்க்க முயற்சி செய்யுங்கள். எடுத்துக்காட்டாக, மேலே உள்ள பயிற்சியில், மூன்று 5-கனசதுர தூண்களின் ஒரு தொகுதி உள்ளது (இது 15 தொகுதிகளை ஒன்றாக உருவாக்குகிறது), மூன்று 3- கனசதுர தூண்களின் ஒரு குழு உள்ளது (ஒன்றாக 9 தொகுதிகளை இது உருவாக்குகிறது), மற்றும் இரண்டு ஒற்றை தொகுதிகள் உள்ளன. எனவே 15 + 9 + 2 ஐ ஒன்றாகச் சேர்ப்பது 26 ஐக் கொடுக்கும்

Extra Task 12: Create Block Counting in Three Dimensions for your friends that may be challenging and share. கூடுதல் பணி 12: சவாலாக உள்ள மூன்று பரிமாணங்களில் தொகுதி எண்ணுதல் கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

TASK 13. Two-Dimensional Mirror Reflections பணி 13. இரு பரிமாண கண்ணாடி பிரதிபலிப்புகள்

Two-Dimensional Mirror Reflections will assess how you view two-dimensional objects from a different perspective and its mirror image. இரு பரிமாண கண்ணாடி பிரதிபலிப்புகள் இரு பரிமாண பொருள்களை வேறுபட்ட கண்ணோட்டத்தில் மற்றும் அதன் கண்ணாடி பிம்பத்தில் நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதை மதிப்பிடும்.

Example 13 எடுத்துக்காட்டு 13:

Which answer shows a reflection of the image below? கீழேயுள்ள படத்தின் பிரதிபலிப்பை எந்த பதில் காட்டுகிறது?

Answer: D பதில்: D

The mirror image will be same for the images whose sides are equal and symmetrical, and whose position is not deviated by some angle. So, assuming the mirror image of blank places, circle, two triangles and a square in the above figure is same, we shall just look at the arrow and look for it’s mirror image. பக்கங்கள் சமமாகவும் சமச்சீராகவும் இருப்பதும் அதன் நிலை சில கோணங்களால் விலகாமல் இருப்பதுமான படங்களுக்கு கண்ணாடி பிம்பம் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே, மேலே உள்ள படத்தில் உள்ள வெற்று இடங்கள், வட்டம், இரண்டு முக்கோணங்கள் மற்றும் ஒரு சதுரம் ஆகியவற்றின் கண்ணாடிப் பிம்பம் ஒரே மாதிரி இருப்பதாகக் கருதி, நாம் அம்புக்குறியை கவனித்து அதன் கண்ணாடி பிம்பத்தை அறியலாம்.

Extra Task 13: Create Two-Dimensional Mirror Reflections for your friends that may be challenging and share. கூடுதல் பணி 13: சவாலாக உள்ள இரு பரிமாண கண்ணாடி பிரதிபலிப்புகள் கேள்விகளை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

Task 14: TANGRAM: பணி 14: டாங்கிராம்:

Tangram is a traditional Chinese puzzle made of a square divided into seven pieces (one parallelogram, one square and five triangles) that can be arranged to match particular designs. டாங்கிராம் என்பது ஒரு பாரம்பரிய சீன புதிர் ஆகும், இது சதுரத்தை ஏழு துண்டுகளாக (ஒரு இணையான வரைபடம், ஒரு சதுரம் மற்றும் ஐந்து முக்கோணங்கள்) பிரிக்கப்பட்டுள்ளது, அவற்றை குறிப்பிட்ட வடிவமைப்புகளுடன் பொருந்தக்கூடிய வகையில் இடம்பெயர்த்தலாம்.

Cut the 7 pieces of Tangram that is given in the annexure at the last. Try to form the different shapes that are given below by placing the pieces in appropriate positions. இணைப்பில் கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள டாங்கிராமின் 7 துண்டுகளை வெட்டுங்கள். துண்டுகளை பொருத்தமான நிலைகளில் வைப்பதன் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள வெவ்வேறு வடிவங்களை உருவாக்க முயற்சிக்கவும்.

 

Extra Task 14: Create some new shapes using TANGRAM: for your friends that may be challenging and share. கூடுதல் பணி 14: டாங்கிராம் பயன்படுத்தி சவாலாக உள்ள புதிய உருவங்களை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு அதை பகிருங்கள்.

 

References:  மேற்கோள்கள்:

1.     https://en.wikipedia.org/wiki/T_puzzle

2.     https://en.wikipedia.org/wiki/Pentomino

3.     https://www.mathsisfun.com/definitions/tangram.html

4.https://psychometric-success.com/spatial-ability-tests#:~:text=dimensional%20cube%20questions.-,Shape%20Matching,possible%20in%20the%20given%20time.

5.     https://www.indiabix.com/non-verbal-reasoning/classification/

6.     https://www.assessmentday.co.uk/free/spatial/1/SpatialReasoningFreeTest-Questions.pdf

7.     https://psych2go.net/spatial-intelligence-quiz-9-types-quiz-series/

8.     https://etc.usf.edu/clipart/galleries/614-cube-counting

9.     https://www.indiabix.com/non-verbal-reasoning/mirror-images

 

 Annexure 1: 4 pieces of T Puzzle இணைப்பு 1: T புதிரின் 4 துண்டுகள்

To cut into pieces துண்டுகளாக வெட்ட

 

 

Annexure 2: Squares with numbers for 8 puzzle இணைப்பு 2: 8 புதிருக்கு எண்களைக் கொண்ட சதுரங்கள்

To cut into pieces துண்டுகளாக வெட்ட

 


 Annexure 3: 12 pieces of Pentonimo  இணைப்பு 3: பென்டோமினோவின் 12 துண்டுகள்

To cut into pieces துண்டுகளாக வெட்ட

 

 

Annexure 4: 7 pieces of Tangram Annexure 4: 7 pieces of Tangram

To cut into pieces துண்டுகளாக வெட்ட

 

Comments

Popular posts from this blog

LOGICAL REASONING & EMOTIONAL INTELLIGENCE- LEVEL 1 (12-14years)- Work sheet