வாழ்க்கைப்பணி தயாராகும் பயிற்சி_ தொலைதூர கற்றல்_6 மாதங்கள்
வாழ்க்கைப்பணி தயாராகும் பயிற்சி_ தொலைதூர கற்றல்_6 மாதங்கள்
இளைஞர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார்கள், மேலும் சுவாரஸ்யமான மற்றும் நன்மை பயக்கும் ஒரு விஷயத்தில் ஈடுபட செய்யாமல் இளைஞர்களைச் சுவர்களுக்குள் வைத்திருப்பது கடினம். வீட்டிலேயே இருந்து சாதகமான செயல்பாடுகளில் ஈடுபட உதவுவதற்கும், தங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க பாதுகாப்பான நடைமுறைகளைப் கடைபிடிக்கவும் இளைஞர்களுக்கு உதவ, தனிப்பட்ட பணித்தாள்கள் மற்றும் இணையப்பக்கங்கள் மூலம் வழங்கப்படும் வாழ்க்கைப்பணி தயாராகும் பயிற்சி உதவியாக இருக்கும். மேலும், இளைஞர்களின் ஆர்வத்திற்கு ஏற்றத் துறைகளில் பயன்படுத்தவும் போட்டித் தேர்வுகளில் பயன்படுத்தவும் நிச்சயமாக இவை ஏற்றதாக இருக்கும்.
வாழ்க்கைப்பணி தயாராகும் பயிற்சி இல் உள்ளடக்கப்பட்ட தலைப்புகள் / கருத்துகளின் பட்டியல் பின்வருமாறு.
1 வது மாதம் | தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் உணர்வுசார் நுண்ணறிவு |
2 வது மாதம் | மதிப்பீடுகளும் சூழ்நிலை நுண்ணறிவும் |
3 வது மாதம் | சொற்களைச் சார்ந்த பகுத்தறிவு மற்றும் பிரச்சனைகளைத் தீர்த்தல் |
4 வது மாதம் | இடஞ்சார்ந்த பகுத்தறிவு மற்றும் செயல்வழி நுண்ணறிவு |
5 வது மாதம் | அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் |
6 வது மாதம் | தன்னிறைவு மற்றும் பிறரை ஆதரித்தல் |
குறிப்பு: ஒவ்வொரு தலைப்பு / கருத்துக்குக் குறைந்தது ஒரு நாளில் 45 நிமிடங்கள்- 1 மணிநேரம் என ஒரு மாதத்திற்கான செயல்பாடுகளின் உள்ளடக்கம் இருக்கும். தலைப்பு / கருத்துக்குத் துணை தலைப்புகள் அல்லது பிரிவுகள் இருக்கும், மேலும் ஒவ்வொரு துணை தலைப்புக்கும் பிரதிபலிக்க, செயல்புரிய, மற்றும் உருவாக்கச் சில செயல்பாடுகள் இருக்கும். உள்ளடக்கம் மூன்று நிலைகளில் இருக்கும்- நிலை 1: 12-14 வயதினர்; நிலை 2: 15-17 வயதினர்; நிலை 3: 18 வயதினருக்கு மேல்.
செயல்பாடுகள் அல்லது கருத்துக்களில் மாணவர்கள் காரியங்களைத் தாங்களே வடிவமைக்க ஊக்குவிக்கப்படுவார்கள் மற்றும் கற்றலை அதிகரிக்க சவாலாகத் தங்கள் நண்பர்களுடன் அதைப் பகிர்ந்துக் கொள்ளலாம். பங்கேற்பாளர்கள் பரிந்துரைக்கப்படுவதை தாண்டி வரம்புகள் இல்லாமல் தங்கள் படைப்பாற்றலை எப்போதும் பயன்படுத்தலாம்.
பின்தொடருதல்: பங்கேற்பாளர்கள் சந்தேகம் மற்றும் தெளிவுபடுத்தல்களுக்கு தொலைபேசி அல்லது மின் அஞ்சல் மூலம் அணுகலாம். ஒரு தலைப்பு / கருத்தில் பணி தாள்களிலிருந்து கற்ற பிறகு, பங்கேற்பாளர்கள் திருத்தங்கள் அல்லது தொடர் கற்றலுக்காகத் தங்கள் செயல்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம். மேலும் வீடியோ பாடங்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஆகியவை சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் வழங்கப்படும்.
(தொலைப்பேசி- 9944695610/ 9282337071 ; மின் அஞ்ச்ல்- paul.hope2014@gmail.com)
விளைவு: பதின்வயதினர் மற்றும் இளைஞர்கள் தன்நம்பிக்கை மற்றும் பொறுப்புடன் வாழ்க்கையில் திறமையானவராக இருப்பர். பதின்வயதினர் மற்றும் இளைஞர்கள் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் சாதகமாகத் தங்களை ஈடுபடுத்துவார்கள். மதிப்பீடுகள் மற்றும் முக்கிய திறன்களைக் கற்று உள்வாங்குவார்கள். போட்டி தேர்வுகள் (TNPSC, UPSC, SSC, GATE) நுழைவு தேர்வுகள் (NEET, JEE, CAT, CLAT) மற்றும் டேலண்ட் தேர்வுகள் (NTSE, NLSTSE, NET, TET) ஆகியவற்றை சந்திக்க அடித்தளமாக இவை இருக்கும்.
Comments
Post a Comment